சேலம் பழைய சூரமங்கலம் துளசி நகரில் உள்ள கபிலர் தெருவில் பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.