சென்னை பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு சாலையில் கடந்த ஒரு மாதங்களாக மழைநீர் வடிகால் மூடி சிதலமடைந்து உள்ளது இந்த சாலை பெசன்ட் நகர் (டிப்போ) மற்றும் பெசன்ட் நகர் சுடுகாடு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை. அந்த பகுதியை கடக்கும்போது அதிகமான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு தொல்லை அதிகம் உள்ளது. சாலையில் பள்ளம் இருப்பதை உணர்த்துவதற்கு தடுப்பு போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் மூடியை சிரமைத்து தரவேண்டும்.