சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2026-02-22 13:31 GMT

ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்ல முடியில், பிரதான சாலையிலேயே கழிவுநீர் ஆறு போல ஓடுகிறது. ஏரியூர்-மேச்சேரி பிரதான சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஊரில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீரை பிரதான சாலையிலேயே விடுகின்றனர். இதனால் அதிக துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையுடன் கடந்து செல்கின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி முழுவதும் கொசுக்கள் உருவாகி, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்