கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2026-02-22 16:48 GMT

சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நுழைவு வாயில் காணப்படுகிறது. அதன் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கட்டுகற்கள் பெயர்ந்து வாய்க்காலுக்குள் கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் அந்த வளைவில் வாகனங்களில் வரும்போதும், திரும்பும்போதும் சற்று தடுமாறி செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி வாய்க்காலில் விழுந்த கல்லை அகற்றி அங்கு வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்