கோத்தகிரி தாசில்தார் அலுவலக சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. அத்துடன் கால்வாயில் இருந்து வெளியேறி சாலையிலும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை நீக்க வேண்டும்.