நாகர்கோவில் பறக்கை செட்டித்தெருவில் வடிகால் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் குப்பகைள் தேங்கி நிற்பதால் கழிவுநீர் வடிந்தோட முடியாமல் காணப்படுகிறது. மேலும், கழிவுநீர் ஓடையும் சிதிலமடைந்து உள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி சீரமைத்து கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவகுமார், பறக்கை.