காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பொதுக்கழிப்பறை கட்டிட வசதி இல்லை. இதன் காரணமாக திறந்த வெளியை அப்பகுதி மக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுக்கழிப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.