மொடக்குறிச்சி 46-புதூர் 19 ரோட்டில் அமைந்துள்ள நொச்சிக்காட்டுவலசு ரூடிஸ் காலனி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் நிரம்பி அருகே உள்ள செடி, கொடிகளில் தேங்கி நிற்கிறது. அதன் அருகிலேயே குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?