சுகாதார சீர்கேடு

Update: 2026-07-19 18:04 GMT
வடலூர் பஸ் நிலையம் அருகே மசூதிக்கு எதிரே உள்ள வாய்க்காலில் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழித்தபடி செல்வதை காண முடிகிறது. அதிலிருந்து உருவாகும் கொசுக்களால் டெங்கு, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் வகையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வழிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்