சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால் மூடி

Update: 2026-07-19 17:48 GMT
ரிஷிவந்தியம் அருகே பிரிவிடையாம்பட்டு ஊராட்சியில் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையின் நடுவே போடப்பட்டுள்ள சிமெண்டு கழிவுநீர் வாய்க்கால் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் உருவான பள்ளத்தில் இருசக்கர வாகனஓட்டிகள் இடறிவிழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால் மூடியை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்