கழிவுநீர் கால்வாயை சீரமைக்கலாமே!

Update: 2026-02-22 13:14 GMT

பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட வி.ஐ.பி. நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் இல்லாத காரணத்தினால் சில இடங்களில் கழிவுநீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியின் கூடாரமாக காணப்படுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் இன்றி கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்