அரூர் பெரியார் நகரில் சண்முகம் ஆசிரியர் தெரு உள்ளது. இந்த தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் தற்போது வரை இந்த பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம் பெய்த கனமழையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாயில் மழை நிரம்பி உள்ளது. மேலும் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கிடப்பில் கிடக்கும் கழிவுநீர் கால்வாய் பணியை முழுமையாக நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், தர்மபுரி.