கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ள பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. இதனால் அங்கு மண்ணும், குப்பையும் அடைத்து கிடந்தது. தற்போது பெய்து வரும் மழையில் கால்வாயில் இருந்து சாலையில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த கால்வாயை முறையாக தூர்வார வேண்டும்.