கோவை மாநகராட்சி 69-வது வார்டுக்கு உட்பட்ட தி.நகர் பகுதியில் தனியார் பள்ளி எதிரே சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி தேங்கி கிடக்கிறது. மழை பெய்தால் இதே நிலைதான் எப்போதும் நீடிக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.