விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பாண்டியன் நகர், இந்திராநகர் பகுதிகளில் போதிய வடிகால் வசதிகள் இல்லாததால் மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் குடியிருப்பு வாசிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் கூடுதல் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.