நோய் பரவும் அபாயம்

Update: 2025-04-27 12:41 GMT

கோவை மாநகராட்சி 99-வது வார்டு கோணவாய்க்கால்பாளையம் நூலகம் அருகே சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. அதில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இந்த புதர் செடிகளில் விஷ ஜந்துகள் பதுங்கி வருகின்றன. மழைக்காலத்தில் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் வீடுகளுக்குள் நுழையும் அபாயம் உள்ளது. அத்துடன் கழிவுநீரும் தேங்கி வருவதால், தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்