பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய்

Update: 2025-04-20 17:14 GMT

மேட்டூர் தாலுகா கொளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு பண்ணவாடி சாலை பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால் தோண்டப்பட்ட கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை கால விரயமின்றி விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஞ்சித், மேட்டூர்.

மேலும் செய்திகள்