நோய் பரவும் அபாயம்

Update: 2025-04-13 17:31 GMT

பாலக்கோடு அடுத்த கடமடையில் அவுசிங் போர்டு குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

-சிங்காரவேலு, கடமடை.

மேலும் செய்திகள்