கோவை மாநகராட்சி 30-வது வார்டு கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கோபால்சாமி கோவில் தெருவில் சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணி நடந்தது. கால்வாயை தூர்வாரிய பிறகு அதனை மூடி போட்டு மூடவில்லை. இதனால் அந்த வழியாக வந்து செல்லும் பள்ளி குழந்தைகள் உள்பட பலரும் தவறி விழும் அபாயம் காணப்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயை மூடி போட்டு மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.