சுகாதார சீர்கேடு

Update: 2025-03-16 17:02 GMT

காளப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அந்த கழிவுநீர் வாய்க்கால் திறந்த வெளியில் உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளித்து செல்கின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பக்தர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்கால் மீது மூடுகல் போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சத்யானந்தன், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்