கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரில் முத்துக்குமாரசாமி கோவில் அருகில் பாவடி தெரு அமைந்து உள்ளது. இங்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கியது. பின்னர் இந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வீட்டுகளின் முன்பு குழி தோண்டப்பட்டதால் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ள இப்பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-கார்த்தி, மணியனூர்.