தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட டாடா நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல உரிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பல மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, கால்வாய் வசதி அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-ராமன், தர்மபுரி.