கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே கருமலை செட்டிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை குழிக்கு மூடி போடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மூடி சாலை மட்டத்தை விட உயரமாக போடப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கால் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு பாதாள சாக்கடை மூடியை சாலை மட்டத்துக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.