பெருமாநல்லூரை அடுத்த தட்டான் குட்டையில் இருந்து அத்திக்காடு செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை ஓரத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்லும் நிலை உள்ளது. இதனால் இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் சாலையும் பழுதடையும் நிலை உள்ளது. எனவே சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்துவதோடு, கழிவுநீர் சாலையில் செல்லாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
ரகு, பெருமாநல்லூர்.