கழிவுநீர் கால்வாய் அவசியம்

Update: 2025-02-16 16:23 GMT

பர்கூர் அடுத்த காரகுப்பம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் வசதிகள் ஏற்படுத்தவில்லை. இதனால் அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடம் அருகில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் சில குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கியுள்ள கழிவுநீரில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

-மணி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்