கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் எஸ்.எஸ்.எஸ். அவென்யூ பகுதியில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் குப்ைபகளும், மண்ணும் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக கால்வாயில் கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கி நிற்கிறது. அதில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.