சேலம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சி லட்சுமி நகர் 4-வது வார்டு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ேமலும் இந்த பகுதியில் சாலையும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தோஷ் பிரவீன், சேலம்.