கால்வாயில் அடைப்பு

Update: 2025-02-09 12:37 GMT

கிணத்துக்கடவு தாலுகா தேவராயபுரம் ஊராட்சி வடக்கு நல்லிகவுண்டன்பாளையத்தில் விநாயகர் கோவில் முன்பு ஊராட்சி சார்பில் போர்வெல் அமைக்கப்பட்டது. அதில் இருந்து எடுத்த மண்ணை அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டனர். இதனால் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் மண் விழுந்து அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த கால்வாயை தூர்வாரி மண்ணை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்