வடவள்ளி பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் வீதி காய்கறி சந்து தெருவில் பாதாள சாக்கடை உடைந்து கிடக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக இதே நிலைதான் தொடர்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடையை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.