திருப்பூா் காதர்பேட்டை நஞ்சப்பா பள்ளி அருகே மாநகராட்சி சார்பில் நம்ம டாய்லெட் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டு சில வருடங்களில் போதிய பராமரிப்பின்றி அலங்கோலமாக காணப்படுகிறது. மேலும் அந்த டாய்லெட்டை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைத்து பராமரிக்க வேண்டும். தற்போது இந்த டாய்லெட் உடைந்து, சுற்றிலும் மரங்கள் முளைத்து, தண்ணீர் தொட்டி சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ‘நம்ம டாய்லெட்டை’ புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகவி, திருப்பூர்.