சுகாதார சீர்கேடு

Update: 2025-01-26 17:04 GMT

மோகனூர் ஒன்றியம் வளையப்பட்டியில் இருந்து குரும்பப்பட்டி செல்லும் வழியில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த தரைப்பாலத்தில் வளையப்பட்டி கிராமத்தின் வடக்கு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே தரைப்பாலத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-பிரபாகரன், குரும்பப்பட்டி.

மேலும் செய்திகள்