ஆனைமலை தாலுகாவில் எல்.ஆர்.டி. பஸ் நிறுத்தம் அருகே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க கால்வாய் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.