கோவை மாநகராட்சி 98-வது வார்டுக்கு உட்பட்ட போத்தனூர் சாரதா மில் சாலை பகுதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி ஆறு போல கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் அங்கு கடும் துர்நாற்றம் வீசியது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவியது. அடிக்கடி அந்த பகுதியில் இதே பிரச்சினை தொடர்கிறது. எனவே அங்குள்ள சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.