சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-01-12 17:18 GMT

சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருப்பூர் மங்கலம் சாலை குள்ளேகவுண்டன்புதூர் பஸ் நிறுத்தம் முன்பாக உள்ள வளைவு சாலையில் கடந்த சில மாதங்களாக கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் சாலையை கடந்து செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள, பணிக்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். சாலையில் சாக்கடைக்கழிவுநீர் தேங்கி நிற்பதோடு துர்நாற்றம் வீசி வருவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கும் மேற்கொள்ளப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் உரிய முறையில் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஆறுமுகம், வீரபாண்டி.

மேலும் செய்திகள்