கழிவுநீரில் கலக்கும் திடக்கழிவுகள்

Update: 2025-01-12 16:54 GMT

சேலம் அன்னதானப்பட்டி புட்டா மிஷின் ரோட்டில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இங்கு மொத்தம் 20 கழிப்பறைகள் உள்ளன. இந்த சுகாதார வளாகத்தின் கழிவுநீர் கலக்கும் செப்டிங் டேங்கில் இருந்து கழிவுநீர், திடக்கழிவுகள் வெளியேறி சாதாரண கழிவுநீர் கால்வாயில் கலந்து செல்கிறது. திடக்கழிவு, கழிவுநீர் இரண்டும் கலந்து செல்வதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையில் திடக்கழிவுகள் செல்லாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

-ராகேஷ். சேலம்.

மேலும் செய்திகள்