திருப்பூர் தாராபுரம் ரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு மற்றும் பஸ் நிறுத்தம் பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பஸ்சுக்காக அங்கு பொதுமக்கள் காத்து நிற்க முடியவில்லை. எனவே அங்கு கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.