தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-12-29 17:54 GMT

திருப்பூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் சரிவர தூர்வாரப்படுவதில்லை. இதனால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. துர்நாற்றம் வீீசுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாக்கடையை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்