ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் கிராமம் சவுரியூரில் கவுண்டர் தெருவில் பெரிய மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலையை கடந்து தான் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் செல்ல வேண்டி உள்ளது. பொதுமக்கள் சாக்கடை நீரில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. அதனால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வர்மன், ஜலகண்டாபுரம்.