கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2024-12-22 13:45 GMT

திருச்செங்கோடு சீதாராம்பாளையம் நடராஜா நகர் பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை வசதி அமைத்து கொடுக்கப்பட்டது. அந்த கழிவு நீரானது பட்டா நிலம், தோட்டங்கள் வழியாக பிரதான கால்வாய்க்கு சென்று அடையும். தற்போது கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவு நீரால் அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் தேங்காத வகையில் இந்த பகுதியில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும்.

-ராஜா, சீதாராம்பாளையம்.

மேலும் செய்திகள்