பொங்கி பாயும் பாதாள சாக்கடை

Update: 2024-10-27 18:33 GMT

திருப்பூர் காலேஜ் ரோடு மரக்கடை பஸ் நிறுத்தம் அருகே ரோட்டின் நடுவே பாதாள சாக்கடை செல்கிறது. இப்பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த நிலையில் தற்போது பாதாள சாக்கடையில் உள்ள மூடியிலிருந்து மழை நீரும், கழிவு நீரும் குபு,குபுவென சாலையில் பொங்கி பாய்ந்து கொண்டிருக்கின்றது. இதுபோன்று ஆங்காங்கே பாதாள சாக்கடைகள் நிரம்பி வழிவது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் பாயும் இதுபோன்ற கால்வாய்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?.


மேலும் செய்திகள்