சுகாதார சீர்கேடு

Update: 2024-10-27 17:32 GMT

நாமக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு, ஆஞ்சநேயர் கோவில் கோட்டை பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அருகில் உள்ள காலி நிலத்தில் கழிவுநீரானது தெப்பகுளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்கள் முகம் சுழித்தவாறு செல்கின்றனர். எனவே கழிவுநீர் செல்ல கால்வாய் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மணி, நாமக்கல்.

மேலும் செய்திகள்