ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, ஏர்கோல்பட்டியில், 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக தெருக்களில் சாக்கடை நீர் ஆறுபோல் ஓடுகிறது. ஆங்காங்கே சாக்கடை நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும்.
-மணிகண்டன், செல்ல முடி.