தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ரெட்டியூர், தளவாய்அள்ளி புதூர் கிராமத்தில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலத்தின் அடியில் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முறையான கால்வாய்கள் அமைக்காததால் மழைக்காலங்களில் தரைப்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்லும் போது வாகனங்கள் அவர்கள் மீது நீரை வாரி அடித்தபடியே செல்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் வெளியேற கால்வாய்கள் அமைக்க வேண்டும்.
-சண்முகம், எர்ரனஅள்ளி.