கோவை மாநகராட்சி 76-வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம் பாரதி சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் கால்வாயை தூர்வாரி, அதில் இருந்த மண்ணை அகற்றி, அங்கேயே குவித்து வைத்தனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அந்த மண்ணை அகற்றவில்ைல. அதில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் மழை பெய்யும்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு மீண்டும் கால்வாயில் மண் சேர வாய்ப்பு உள்ளது. அத்துடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே அந்த மண்ணை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.