திருச்செங்கோடு சின்ன எலச்சிபாளையத்தில் பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தபகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சமத்துவபுரத்தை சுற்றியும் கம்பி வேலி இருந்தது. ஆனால் தற்போது அவை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே ேசதமடைந்த கம்பி வேலியை நீக்கி விட்டு சமத்துவபுரத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவும் வேண்டும்.
-ராஜ், நாமக்கல்.