நாமக்கல் பஸ் நிலையம் அருகில் உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் முகம் சுழித்தவாறு செல்கின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீர் வெளியே செல்ல இயலாத வகையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உழவர் சந்தையில் கழிவுநீர் தேங்காத வகையில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே உழவர் சந்தையில் கடை வைத்துள்ள விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
-சரவணகுமார், மோகனூர்.