கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-12-10 17:07 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சியில் சுமார் 100 அடி உயரம் கொண்ட நம் அருவி நீர்வீழ்ச்சி உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியின் உபரி நீர் இறுதியாக புளியஞ்சோலைக்கு சென்று விடுகிறது. இதில் அரியூர் நாடு மற்றும் வலப்பூர் நாடு பகுதி மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு நம் அருவி நீர்வீழ்ச்சியில் இருந்து சிறு வாய்க்கால் அமைத்து உபரி நீரை கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த வாய்க்கால் செல்லும் பகுதியில் மழை பெய்யும் போது அப்பகுதியில் உள்ள குன்றுகளில் இருந்து சிறு, சிறு கற்கள் மற்றும் பாறைகள் உருண்டு வந்து அந்த வாய்க்காலில் விழுந்து விடுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உபரி நீர் சாலையில் வீணாக வெளியேறுகிறது. எனவே வாய்க்காலில் கிடக்கும் கற்களை அள்ளி அதனை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

-அரவிந்த், நாமக்கல்.

மேலும் செய்திகள்