தூர்வாரிய கால்வாய் மண்ணை அள்ள வேண்டும்

Update: 2022-08-29 15:34 GMT

திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பஸ் நிலையம் அருகில் ஒரு நகைக்கடைக்கு நேர் எதிர் தெருவில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கழிவுநீர் கால்வாயில் தூர்வாரிய மண்ணை அருகில் போட்டு, 10 நாட்களுக்கு மேல் அப்புறப்படுத்தாமல் உள்ளனர். அந்தத் தெருவே கழிவு மண்ணாக காட்சியளிக்கிறது. நகராட்சி பணியாளர்கள் தூர்வாரிய கழிவுநீர் கால்வாய் மண்ணை உடனடியாக அள்ள வேண்டும்.

-கந்தசாமி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்