ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி நகர் பகுதியில் சீதாராமன் தெருவில் பக்க கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டி பல மாதங்கள் ஆகிறது. ஆனால், கால்வாய் பணி முழுமை பெறாமல் உள்ளது. அதில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி உள்ளது. ஊராட்சி மற்றும் ஒன்றியம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-ராஜேந்திரன், வேலப்பாடி.