பாதாள சாக்கடை மூடியை சுற்றிலும் பள்ளம்

Update: 2025-07-27 17:36 GMT

அரக்கோணம்-திருத்தணி சாலையில் பாபன்குளம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி எதிரே பாதாள சாக்கடை மூடியைச் (மேன்ஹோல்) சுற்றிலும் பழுதடைந்து, பள்ளம் ஏற்பட்டு பல மாதங்களாக சரி செய்யாமலே உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து வரும் போது அவ்வழியாக பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் நிலை உள்ளது. அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமகிருஷ்ணன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்